டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது 07-03-2019

ஐம்பெரும்விழா 

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வர்கள் , பயிற்சி அலுவலர்கள் மற்றும் பயிற்றுனர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா 
நாள் : 07-03-2019
இடம் : வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 


டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது
டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது


டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது
டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது





டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது
டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது

டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது
டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது





எழுத்தறிவித்தவன் இறைவன்..!

ஆசிரியராக பணி தொடங்கி, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளே ஆசிரியர் தினமாக (Teachers' day) ஆண்டு தோறும் செப்டம்பர் 5-ம் தேதி இந்தியாவில் கொண்டாப்படுகிறது. 

ஆசிரியர்கள், சிறந்த வழிகாட்டிகளாக இருந்து வருகின்றனர். இதை யாரும் மறுத்து சொல்ல முடியாது. அனைவரும் ஏதாவது ஒருவகையில் ஆசிரியர்களுக்குக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

ஆசிரியர் அரவணைப்புடன் கல்வி போதிப்பவர், மாணவனின் திறமைகளையும் வெளிக் கொண்டு வர விரும்புவர். எனவேதான் ஆசிரியர் பணியை 'புனிதமான தொழில்' (Noble Profession)என்கிறார்கள்.

'மாதா, பிதா, குரு, தெய்வம்' என இந்தியாவில் பெற்ற தாய் - தந்தைக்கு அடுத்த இடத்தை ஆசிரியருக்கு வழங்க இருக்கிறார்கள். இறைவனுக்குக் கூட ஆசிரியருக்கு அடுத்த இடம்தான். 
அறிவுப்படையை உருவாக்கும் பொறுப்பை கடமையாக கொண்ட ஆசிரியர்களை அனைவரும் போற்றி பாராட்டுவோம். 

டாக்டர் ராதாகிருஷ்ணன்.. 

ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய நாட்டின் முதல் குடிமகனாய் (ஜனாதிபதி) இருந்த பேராசிரியர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை வீராசாமி புரோகிதர்.

தன் திறமையால் பேராசிரியராகவும், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராகவும், இந்திய அரசின் தூதராகவும் பணியாற்றிய மேதை ராதாகிருஷ்ணன்..!

133 டாக்டர் பட்டங்கள்..!

இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த ராதாகிருஷ்ணன நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரைப் பல்வேறு விருதுகள் தேடி வந்தன. இள வயதிலேயே ராதாகிருஷ்ணன் பல நூல்களை எழுதித் தனது எழுத்தாற்றலை அனைவரும் அறியும்படி செய்தார். இவர் மேடைப் பேச்சிலும் வல்லவர். வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சிறப்புரைகள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. டாக்டர் ராதா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்களின் எண்ணிக்கை 133.  

இவர் 1975, ஏப்ரல் 17-ம் தேதி மறைந்தார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர் ராதாகிருஷ்ணன சாலை' எனப் பெயரிடப்படுள்ளது. 
ஆசிரியர் தினத்தின் போது ஆசிரியர்களுக்கு மாநில விருதும், தேசிய விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' என்னும் பெயரில் வழங்கி வருகிறது.

எளிமையான இல்லம்...

இந்தியாவின் 2-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவி காலம் முடிந்ததும், சென்னை மைலாப்பூரில் அவருடைய பெயரில் அமைந்துள்ள (டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை) அவருடைய சொந்த பங்களாவில் இறுதி காலம் வரை வாழ்ந்தார்.

அவர் எப்படி படாடோபமின்றி வாழ்ந்தாரோ அதே போல் அவர் வசித்த பங்களாவும் ஆடம்பரமான அழகு வேலைப்பாடுகள் இன்றி அன்று கண்ட நிலையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 
'கிரிஜா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பங்களாவில் இப்போது டாக்டர் ராதா கிருஷ்ணனின் மருமகள் இந்திரா கோபால் வசித்து வருகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய புத்தகங்கள், பேனா உள்பட அனைத்து பொருட்களும் அவர் பயன்படுத்திய நிலையில் அப்படியே காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு உள்ளன. 

அன்பு பரிசு..! குரு நிவாஸ்..!

ஆசிரியருக்கு மாணவர்கள் குருதட்சணையாக வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வரலாற்று சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு நடந்தது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைபள்ளியில் 31 ஆண்டுகள் தமிழாசிரியராக பணி புரிந்து வந்தவர் புலவர் வெங்கட்டராமன். இவர் எளிய நடையில் தமிழை கற்றுக் கொடுப்பதில் வல்லவர். அதுவும் திருக்குறளுக்கு விளக்கம் அளிப்பதில் அலாதி திறன் பெற்றிருந்தார். வெங்கட்டராமனின் "தமிழ் வகுப்பு" என்றாலே மாணவர்களுக்கு தெவிட்டாத மகிழ்ச்சியை தந்தது. அத்தோடு அனைவரிடமும் அன்புடனும் பழகி வந்தார். 

ஆசிரியர் பணியோடு அவர் நிற்கவில்லை. ஊரின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டினார். 
ஓய்வு பெற்ற பிறகு ஏழ்மைதான் அவரது சொத்தாக இருந்தது. குடி இருப்பதற்கு வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். எத்தனையோ மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை காணச் செய்த இந்த ஆசானின் வாழ்க்கை நிலையை கண்டு முன்னாள் மாணவர்கள் பலர் அவருக்கு "குரு தட்சணை"யாக வீடு கட்டி கொடுக்க தீர்மானித்தனர். 

அவரிடம் படித்து தொழிலதிபர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் உள்ள முன்னாள் மாணவர்கள் பலர் குரு பக்திக்கு இலக்கணமாக திகழும் வகையில் மன முவந்து வழங்கிய நிதியினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீடு (குரு நிவாஸ்) குருசாமிபாளையம் அருகே உள்ள வண்டிப்பேட்டையில் கட்டப்பட்டது. 

2009-ம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று புதிய வீட்டின் கிரகபிரவேசம் கோலாகலமாக நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களை புலவர் வெங்கட்டராமன் அட்சதை தூவி வாழ்த்தினார். முன்னாள் மாணவரும் உத்தரபிரதேசத்தின் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யுமான பழனிவேல், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் தனசேகரன், கவிஞர் சுப்பிரமணியம், உள்பட நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

கிரக பிரவேசம் குறித்து புலவர் வெங்கட்டராமன் கூறும் போது, "சிறிய அளவில் செய்வதாக சொன்னார்கள். கூறினார்கள், இந்த அளவுக்கு பெரிதாக செய்திருப்பதை கண்டு நெஞ்சம் மகிழ்கிறது" என்றார்.


தாயும் தந்தையும் குழந்தையை உலகுக்கு தருகின்றனர். ஆனால், ஓர் ஆசிரியர் உலகத்தையை குழந்தைக்கு தருகிறார் என்றால் மிகை இல்லை.