நான் வரைந்த ஓவியங்கள்

குறிப்பு :   பத்து படம் வரைந்த எனக்கே இப்படி என்றால் இந்த பணியை தினந்தோறும் செய்பவர்களுக்கு ??????

               நான் வரைந்த ஓவியங்கள்

என் மகளுக்கு project வேலைகள் செய்வதற்காக விளையாட்டாக வரைய ஆரம்பித்தேன் .
தற்சமயம் இதனை அனுபவித்தவுடன் தெரிவது என்னவென்றால் கோவில்களுக்கு சென்று இறைவனை கும்பிடுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட
தியானம் செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட ,
கதை ,கவிதை எழுதுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிறருக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிற பொருட்களை அல்லது பிற மனிதர்களை  வரைவதால் மிக மிக அதிகமாக மன அமைதி கிடைக்கிறது .
மேலும் ஒரு மனிதனுக்கு
கூர்மையான பார்வை
கூர்மையான புத்தி
கூர்மையான செயல்
இவை மூன்றும் இருந்தாலே வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதை வரைந்து அனுபவித்து கற்றுகொண்டேன் .
நான் படிக்கும் பொது இருந்த ஓவிய ஆசிரியர்கள் ,மற்றும் உலகில் உள்ள அனைத்து ஓவியர்களின் சேவைகளுக்கு என் பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
 ஓவியர்களின் சேவைகள் நம் வருங்கால மாணவர்களுக்கும் ,நம் எதிர்கால இந்தியாவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .
ஓவியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

நான் தற்சமயம் பயன்படுத்தும் ஓவிய கருவிகளை படமாக வரைந்துள்ளேன்.
1.எனது கை
2.பென்சில்
3.ரப்பர்
4.பரீட்சை அட்டை
5.பேப்பர்
6.மூக்கு கண்ணாடி (reading கிளாஸ்)
இருப்பதை வைத்து இன்பமாக வரையுங்கள் .

"என் கருத்தையும் படித்த அனைவருக்கும் நன்றி .நன்றி"